Please click the below button for donation


ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.


தாங்கள் ஹரித்வாரில் நடைபெறவுள்ள கும்பமேளாவில் கலந்துகொள்ள விருப்பம் தெருவித்து இருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.


கும்பமேளா பிரச்சார சமிதி என்னும் நமது அமைப்பு முறையான அங்கீகாரம் பெற்ற சமூக சேவை அமைப்பின்கீழ் இயங்கும் தன்னார்வ இயக்கம் ஆகும்.


ஒவ்வொரு கும்பமேளாவின் போதும் நமது அமைப்பானது யாத்திரிகர்கள் தங்குவதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இம்முறையும் ஹரித்துவாரில் ஜனவரி 2021 இரண்டாம் வாரம் தொடங்கி நடைபெற இருக்கும் கும்பமேளாவில் அனைவரும் தங்கி, ஸ்நானம் செய்து உணவு அருந்தும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.


ஹரித்வார் கும்பமேளாவின் முக்கிய ஸ்நான நாட்கள்


மார்ச் -11

ஏப்ரல் - 12

ஏப்ரல் - 14

ஏப்ரல் - 27 ஆகும்.


யாத்ரிகள் வசதிக்காக, ஹரித்வார் கும்பமேளாவில் கங்கை நதிக்கரையின் அருகிலேயே நமது தங்குமிடம் இருக்கும். அங்கேயே கங்கையில் நீராடும் வசதி உள்ளது. ஹரித்வார் நகரின் முக்கிய இடத்தில் இருந்து 2 அல்லது 3 கி.மி தூரம் வரை இருக்கும் நமது தங்குமிடத்திற்கு ஆட்டோவில் செல்ல அனுமதி உண்டு. ஆனால் முக்கிய ஸ்நான நாட்களில் ஆட்டோ செல்ல தடை செய்யப்படும்.


இதற்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சுமார் 750/- ரூபாய் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அறை ஒன்றில் 3 அல்லது 4 நபர்களுக்கு பகிர்வு முறையில் அறைகள் ஒதுக்கப்படும். ஒரு முழு அறைக்கு நன்கொடையாக 3000/- செலுத்த வேண்டியிருக்கும். இவை அனைத்தையும் மற்றொரு அறக்கட்டளை வழியாக ஏற்பாடு செய்கிறோம். இதை தவிர ஹரித்வார் சென்று வரும் பயணச்செலவு தனியாகும்.

இதற்கு முன்பதிவு செய்ய கும்ப மேளா பிரச்சார சமிதி என்னும் நமது அமைப்பின் வழி கட்டணங்களை செலுத்தலாம். கட்டணத்தொகை திருப்பி தரப்பட மாட்டாது.

மேலும் விவரங்கள் அறிய கிழே குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


  • 1) +91 98408 66191
  • 2) +91 98411 10432
  • 3) +91 99400 69902

கட்டணங்கள் செலுத்த கடைசி நாள் இம்மாத இறுதி ஆகும்.

இவை அனைத்தும் கடைசி நிமிட மாறுதல்களுக்கு உட்பட்டது.


Please click the below button for donation